மாம்பழம்

மாம்பழமாம் மாம்பழம்
மாமா தந்த மாம்பழம்

இனிப்புத் திகட்டும் மாம்பழம்
இனிமை தரும் மாம்பழம்

சுவை மிகுந்த மாம்பழம்
சொக்க வைக்கும் மாம்பழம்

சத்து நிறைந்த மாம்பழம்
சக்தி தரும் மாம்பழம்

நேற்று பறித்த மாம்பழம்
நினைவில் நிற்கும் மாம்பழம்